அமெரிக்காவின் உயிரின ஆய்வகங்களில் என்ன நடக்கிறது என்ற கேள்விக்கு உண்மையான பதில்!
2021-10-19 17:11:51

பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த உயிரின ஆய்வகங்களை மூட வேண்டும் என்ற  ஒலி கடந்த ஓரிரு ஆண்டுகளில் எழுந்துள்ளது. இத்தகைய ஆய்வகங்களுக்கு அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆதரவு இருப்பதையும் பல்வேறு உண்மைகள் வெளிப்படுத்தியுள்ளன.

எடுத்துக்காட்டாக, அமெரிக்க இராணுவத்தின் நிதியுதவியுடன் கசாகஸ்தானில் உயிரின ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், அல்மாட்டி நகரில் உள்ள உயிரின ஆய்வகம்  ஒன்று, 2017ஆம் ஆண்டில் மேற்கொண்ட“KZ-33”எனும் ஆய்வுத் திட்டத்தில், மூன்று குகைகளிலிருந்து 200 வெளவால்களின் கழிவுகளின் மாதிரிகளை ஆய்வாளர்கள் திரட்டி, 12 புதிய வகை கரோனா வைரஸ்களைக் கண்டறிந்தனர். கடந்த சில ஆண்டுகளில் கசகாஸ்தானில் பலமுறை திடீரென தொற்றுகள் நிகழ்ந்த காலத்துக்கும் அமெரிக்க ஆய்வகம் குறிப்பிட்ட வைரசை ஆய்வு செய்த காலத்துக்கும் இடையே ஒரே மாதிரி காணப்பட்டது என்று ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

தற்போது வரை, உலகளவில் அமெரிக்காவினால் நிறுவப்பட்டுள்ள உயிரின ஆய்வகங்கள் 200ஐ தாண்டியது. அமெரிக்கா இந்த அதிகமான உயிரின ஆய்வகங்களை அமைத்திருக்கும் நோக்கம் என்ன?இது குறித்து ரஷிய கூட்டாட்சி பாதுகாப்பு ஆணைய செயலாளர் நிகோலாய் பட்ருவேவ் கூறுகையில், அபாயம் தரும் வைரஸை இராணுவ மற்றும் அரசியல் நோக்கிற்காக பயன்படுத்த அமெரிக்கா முயல்கின்றதை சில தெளிவான அடையாளங்கள் காட்டுகின்றன என்றார்.

அமெரிக்காவைச் சேர்ந்த உயிரின ஆய்வகங்கள் மீது பல்வேறு நாடுகளின் மக்கள் சந்தோகம் கொள்கின்னர். இந்நிலையில், அமெரிக்க அரசு இதற்கு பதில் அளிக்க வேண்டும்.  மனிதர்களின் உயிர் பாதுகாப்புடன் தொடர்புடைய பிரச்சினையின் உண்மையை அறிந்து கொள்ளும் உரிமை நமக்கு உண்டு.