மனித உரிமைகள் பற்றி பேசுகையில், அமெரிக்கா தகுதி பெறவில்லை
2021-10-19 20:53:13

அமெரிக்க தலைவர் அண்மையில் வெளியிட்ட உரையில் சின்ஜியாங்கில் “கட்டாய உழைப்பு” இருப்பதாக அவதூறு பரப்பியதுடன், சீனாவின் சின்ஜியாங் கொள்கைக்கு கண்டனமும் தெரிவித்தார். ஆனால், இது, “ஒழுக்க நெறிக்கான அமெரிக்காவின் தலைமைத்துவத்தை” உருவாக்க முடியாது. மாறாக, அது மனித உரிமை பிரச்சினைகளில் அமெரிக்காவின் கபடத்தனத்தையே அம்பலப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கல்வி நிறுவனம் ஒன்றின் புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் சுமார் 5 லட்சம் மக்கள் நவீன அடிமைத்தனம் மற்றும் கட்டாய உழைப்பில் அல்லல்படுகின்றனர். தொழிலாளர்களின் மனித உரிமைகளை தீவிரமாக மீறும் நாடு அமெரிக்கா ஆகும்.

தவிர, வெளிநாடுகளில் அமெரிக்கா மனித உரிமை தீமையை உருவாக்கி வருகின்றது. மனித உரிமைகள் மூலம், மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் அது தலையிட்டுள்ளது. இதனால், இந்த நாடுகள் போர் மற்றும் அமைதியின்மை நிலைக்குத் தள்ளப்பட்டன.

மாறாக, சீன அரசு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதால், சின்ஜியாங்கில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக வன்முறை பயங்கரவாத சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. சின்ஜியாங்கின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகின்றது.

அமெரிக்கா சொந்த மனித உரிமை பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். மனித உரிமை மூலம் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது.