அமெரிக்காவில் வறுமைக்கும் செல்வத்துக்குமிடையேயான இடைவெளி
2021-10-20 20:34:42

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி புதிதாக வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் 10 விழுக்காட்டு பணக்காரர்கள், அந்நாட்டின் 89 விழுக்காடான பங்கு பத்திரங்கள் மற்றும் நிதியைக் கொண்டுள்ளனர். இது வரலாற்றில் மிக அதிகமாகும். மேலும், அமெரிக்காவில் மிக அதிக வருமானம் பெறும் 1 விழுக்காட்டினர்களின் செல்வம், நடுத்தர வகுப்பினர்களின் மொத்த செல்வத்தையும் தாண்டியுள்ளது. இது அமெரிக்காவின் பதிவில் முதல்முறையாகும். அமெரிக்காவில் வறுமைக்கும் செல்வத்துக்குமிடையேயான இடைவெளி மென்மேலும் அதிகரித்து வருவதை இது காட்டுகிறது என்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

மேலும், அமெரிக்காவின் அடித்தட்டு மக்களின் நிலைமையை ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்கள் அண்மையில் வெளியிட்டன. 40 விழுக்காட்டு குடும்பங்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளன. கரோனா வைரஸ் பரவல் காரணமாக, வறுமைக்கும் செல்வத்துக்குமிடையேயான இடைவெளி மேலும் அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் அதி தீவிர வறுமைக்கு, அந்நாட்டின் அரசியல்வாதிகளே காரணமாகும் என்று ஐநாவின் மனித உரிமை செயற்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அரசியல், பண அரசியலாகும். வறுமைக்கும் செல்வத்துக்குமிடையேயான இடைவெளி என்ற பிரச்சினையை எதிர்நோக்கும் போது, அரசியல்வாதிகள் அவர்களின் சொந்த நலன்களையே பாதுகாக்க விரும்புகின்றனர்.

அமெரிக்காவின் அரசியல்வாதிகள் இப்பிரச்சினையில் தொடர்ந்து பராமுகத்துடன் நடந்து கொண்டால், உண்மையான நெருக்கடி உண்டாகும்.