மோதல் மற்றும் எதிர்ப்பைத் தூண்டி வருகின்ற அமெரிக்கா
2021-10-21 20:54:44

சீனாவின் அச்சுறுத்தல் என்ற கூற்றை அமெரிக்காவின் அதிகாரிகள் சிலர் அண்மையில் மீண்டும் பரப்பினர். எடுத்துக்காட்டாக, சீனாவும் ரஷியாவும் படைக்கலப் போட்டியைத் தீவிரவாக்குவதாக அவர்கள் பிரசங்கம் செய்தனர். தனது இராணுவ ஆற்றலை விரிவாக்கி, அமெரிக்காவின் மேலாதிக்கப்போக்கைத் தொடர்ந்து ஆதரிக்கும் ஒரு சாக்குபோக்கு இதுவாகும்.

உலகளவில் மிகப் பெரிய, மிக முன்னேறிய அணு ஆயுதக் கிடங்கை அமெரிக்காதான் கொண்டுள்ளது. அதோடு, அணு ஆற்றலின் நிலை உயர்விலும் அது லட்சக்கணக்கான கோடி டாலருக்கு மேலான நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளது. இது, உலகின் ஐயம் மற்றும் கவலையை அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்தால் ஏற்பட்ட கடும் பாதிப்பு இன்னும் நிலவுகிறது. இருப்பினும், அது புதிய இராணுவக் குழுவை உருவாக்கி, ஆயுத ஆற்றல் மூலம் புதிய நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இதற்கான காரணம், போர்களிலிருந்து பெரும் நலனைப் பெறுவதே.

அமெரிக்கா மோதல் மற்றும் எதிர்ப்பைத் தூண்டி, அமைதி மற்றும் நிலைப்புத் தன்மையைப் பாதித்து வருகின்றது என்பதை உண்மைகள் நிரூபித்துள்ளன.