சீன வளர்ச்சி வினியோகித்த வாய்ப்புகள்
2021-10-26 18:52:25

கூட்டு வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு சீன மக்கள் பாடுபட்டு வருகின்றனர். டசாங்னியா-சம்பியா இருப்புப்பாதையிலிருந்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவுக்கு வரை, சீனா வளரும் நாடுகளுக்கு இயன்ற உதவி அளித்து, சீன வளர்ச்சியின் மூலம், உலகிற்கு புதிய வாய்ப்புகளை வழங்கி வருகின்றது என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், 25ஆம் நாள், சீன மக்கள் குடியரசு ஐ.நாவிலுள்ள சட்டப்பூர்வ இருக்கையை மீட்டெடுத்த 50ஆவது ஆண்டு நிறைவு கூட்டத்தில் தெரிவித்தார். சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்பு பணியில் சீனா உறுதியாக ஊன்றி நின்று, உலக வளர்ச்சிக்கு துணை புரியும் சக்தியாக இருந்து வருகின்றது. உலக முழுவதும், பொருளாதார சமூக வளர்ச்சியை முன்னேற்றி பொது மக்களுக்கு மேலதிகமான நலனை தர வேண்டும் என்று ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

சீனாவின் வளர்ச்சி உலகிற்கு வாய்ப்பு கொடுத்துள்ளது என்று ஐ.நா தலைமை செயலாளர் குட்ரேஸ் அன்று கூறியதும் நினைவு கூரத்தக்கது.