அமைதியான வளர்ச்சியில் ஊன்றி நின்று வரும் சீனாவின் பங்களிப்பு
2021-10-26 10:11:06

சீன மக்கள் குடியரசு ஐ.நாவில் தனது சட்டப்பூர்வமான இடத்தை மீட்டெடுத்த 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அக்டோபர் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற நினைவுக் கூட்டத்தில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பங்கெடுத்து உரைநிகழ்த்தினார். சீனா எப்போதும் அமைதியான வளர்ச்சிப் பாதையில் ஊன்றி நின்று வருகின்றது என்று அவர் சுட்டிக்காட்டினார். ஐ.நா. தலைமைச் செயலாளர் குட்ரெஸ் அதே நாள் உரைநிகழ்த்தியபோது, உலகின் அமைதியையும் வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்கு சீனா ஆற்றியுள்ள முக்கியப் பங்கிற்கு நன்றி தெரிவித்தார்.

கடந்த 50ஆண்டுகளில், சீனா பல்வேறு நாடுகளின் மக்களுடன், ஒன்றுபட்டு ஒத்துழைப்பு மேற்கொண்டு, சர்வதேச நியாயம் மற்றும் நேர்மையை பேணிக்காத்து வருகின்றது. ஐ.நா.வை நிறுவிய நாடுகளில் ஒன்றாகத் திகழும் சீனா, அமைதியான வழிமுறையில் சர்ச்சைகளுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஆதரவு அளித்து வருகின்றது.

தற்போதுவரை, ஐ.நா.பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடான சீனா, ஐ.நா.வின் அமைதிகாப்பு நடவடிக்கையில் ஈடுபட, 50ஆயிரத்துக்கும் அதிகமான பேரை அனுப்பியுள்ளது.

தவிர, சர்வதேச இராணுவக் கட்டுபாட்டு மற்றும் படைக் குறைப்பு நடவடிக்கைகளில் சீனா ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்து, 20க்கும் அதிகமான சர்வதேச இராணுவக் கட்டுபாட்டு உடன்படிக்கைகளிலும் அமைப்புமுறைகளிலும் இணைந்துள்ளது.

அமைதியான வளர்ச்சியில் ஊன்றி நின்று வரும் சீனா, உலக அமைதியைப் பேணிக்காப்பதில் முக்கிய சக்தியாக மாறி, மனித குலத்தின் முன்னேற்ற இலட்சியத்துக்கு தொடர்ந்து பங்காற்றி வருகின்றது.