உண்மையான பலதரப்புவாதத்தை சீனா உறுதியாகப் பாதுகாக்கும்
2021-10-27 16:32:08

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 25ஆம் நாள் சீன மக்கள் குடியரசு ஐ.நாவின் சட்டப்பூர்வ இடத்தை மீட்டெடுத்த 50ஆவது ஆண்டு நிறைவுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில், ஐ.நாவின் அதிகாரம் மற்றும் தகுநிலையை நாம் உறுதியாகப் பேணிக்காத்து, உண்மையான பலதரப்புவாதத்தை கூட்டாகச் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். உலகிற்கு எத்தகைய சர்வதேச ஒழுங்கு தேவை என்ற முக்கிய பிரச்சினைக்கான சீன நிலைப்பாட்டை அவரது இந்த கூற்று மீண்டும் விளக்கி கூறி, சீனா பலதரப்புவாதப் பாதையில் உறுதியாக நடைபோட்டு, சர்வதேச ஒழுங்கை எப்போதும் பேணிக்காக்கும் என்று வலியறுத்தியது. தற்போதைய காலக்கட்டத்தில், ஷிச்சின்பிங்கின் இந்த கருத்து நடைமுறையான முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.