அமெரிக்கா கேட்டறிய வேண்டிய கருத்துக்கள்
2021-10-28 14:25:39

பெய்ஜிங் சியாங்ஷான் மன்றத்தின் 2021ஆம் ஆண்டு நிபுணர்களின் காணொளி கூட்டம் 26ஆம் நாளிரவு நிறைவுற்றது. 2 நாட்கள் தொடர்ந்த இக்கூட்டத்தில், 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 50க்கும் அதிகமான அறிஞர்கள், பெரிய நாடுகளின் உறவு மற்றும் ஆசிய-பசிபிக் பாதுகாப்பு, பலதரப்புவாதம் மற்றும் சர்வதேச கட்டமைப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு, உலகளாவிய பாதுகாப்பு நிர்வாகத்துக்கு ஆலோசனைகளை வழங்கினர். பலதரப்புவாதத்தையும் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றியையும் பின்பற்றி, உலக அமைதி மற்றும் நிலைத்தன்மையைக் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

சுமார் இரண்டு ஆண்டுகளாக கோவிட்-19 நோய் பரவல் மனிதகுலத்தின் உயிர் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகி வருகிறது. இதனிடையே, அமெரிக்கா பனிப்போர் சிந்தனையுடன் ஒருசார்பாக செயல்பட்டு, ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் எதிரெதிர் நிலையை ஏற்படுத்தி, ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையை சீர்குலைத்து, பல நாடுகளுக்கு பதற்றம் மற்றும் கவலையைக் கொண்டு வருகிறது.

நடப்பு மன்றக் கூட்டத்தில், ஆசிய-பசிபிக் பாதுகாப்புக்கு அமெரிக்காவின் தாக்கம் பற்றி விவாதம் நடத்திய நிபுணர்கள், உலகளவில் பல பிரதேச மோதல்கள், அமெரிக்காவின் கூட்டணி முறைமையால் உருவாக்கப்பட்டன என்று சுட்டிக்காட்டினர். இந்தோ-பசிபிக் பிரதேசம் மீது அமெரிக்கா மேலும் பெரும் சகிப்பு தன்மை வாய்ந்த கொள்கையை மேற்கொண்டு, சீனா மற்றும் இதர நாடுகளுடன் இணைந்து பிராந்திய அமைதி மற்றும் செழுமையை மேம்படுத்த வேண்டும் என்று அமெரிக்காவுக்கான மூன்னாள் சீனத் தூதர் ருய் சியாவ்ஜியன் முன்மொழிந்தார்.

நடப்பு மன்றக் கூட்டத்தில், பலதரப்புவாதத்தைக் கடைப்பிடித்து ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெற வேண்டிய கருத்து, யுகத்துக்கு தேவையானது. இதனை அமெரிக்கா நன்றாகக் கேட்டறிய வேண்டும்.