சீன மக்களுக்கு அறைகூவல் விடும் செயலை அமெரிக்க நிறுத்த வேண்டும்!
2021-10-28 14:43:31

அக்டோபர் 25ஆம் நாள் ஐ.நாவில் சட்டப்பூர்வ இடத்தை சீன மக்கள் குடியரசு மீட்டெடுத்த 50ஆவது ஆண்டு நிறைவு நாளாகும். ஆனால், அதன் பிந்தைய 26ஆம் நாள், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், ஐ.நா. முறைமையில் தைவான் ஆக்கப்பூர்வமாக பங்கெடுப்பதற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். இத்தருணத்தில் அமெரிக்காவின் இச்செயல், ஒரே சீனா என்ற கோட்பாட்டுக்கு எதிரான வெளிப்படை சவாலாகும். தீய நோக்கத்துடன் கூடிய இச்செயல், 140 கோடி சீனர்களுக்கு பெரும் ஆத்திரமூட்டியுள்ளது.

இவ்வாண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபரில், ஒரே சீனா என்ற கொள்கையைப் பின்பற்றுவதாக அமெரிக்கா தெரிவித்த்து. ஆனால், இறையாண்மை கொண்ட நாடுகள் மட்டும் இணையக் கூடிய ஐ.நாவில் தைவான் தனது இடத்தை விரிவாக்குவதற்கு அமெரிக்கா வெளிப்படையாக ஆதரவளித்துள்ளது. இதன் மூலம், பெரிய நாட்டின் நம்பகத் தன்மை அமெரிக்காவுக்கு ஒன்றுமில்லை என்பதைக் காண முடிகிறது.

தைவான் சுதந்திரத்தைத் தேடி வரும் சக்திக்கு அமெரிக்கா பொய் வாக்குறுதியை அளித்து வருகிறது. ஆனால், ஆப்கானைப் பார்த்தால், அமெரிக்க அரசியல்வாதிகளின் வாக்குறுதியை யாரால் நம்ப முடியும்? தைவானின் மூலம் சீனாவின் வளர்ச்சியைத் தடுப்பது, அமெரிக்காவின் தெளிவான நோக்கமாகும். இருப்பினும், தைவான் பிரச்சினை, சீனாவின் மைய நலனுடன் தொடர்புடையது. ஒரே சீனா என்ற கொள்கைக்கு சவால் விடுக்க கூடாது. இதுதான் சீனாவின் உறுதியான நிலைப்பாடு.