காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க பாடுபட்டு வரும் சீனா
2021-10-28 20:43:02

கடந்த சில ஆண்டுகளாக உலகம் வெப்பமாகி வருவதால் பல்வகை பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது அவசியமான உலகளாவிய விவகாரமாக மாறியுள்ளது. காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான சீனாவின் கொள்கை மற்றும் நடவடிக்கை எனும் வெள்ளையறிக்கையை சீன அரசு அண்மையில் வெளியிட்டது. கடந்த சில ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தை சீனா சமாளிக்கும் முன்னேற்றம் மற்றும் பயனை வெளியுலகத்துக்கு விவரித்து, காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் சர்வதேச கடமைக்குப் பொறுப்பேற்று, மனித குலத்தின் பொது சமூகத்தின் உருவாக்கத்தை விரைவுபடுத்தும் சீனாவின் முயற்சியை இவ்வெள்ளையறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

2011 முதல் 2015ஆம் ஆண்டு வரையான இரண்டாவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் சீனா காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதை தேசிய பொருளாதார சமூக வளர்ச்சி திட்டத்தில் சேர்த்தது. தற்போது காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது, சீனாவின் தேசிய நெடுநோக்கு திட்டமாக மாறி, குறிப்பிட்ட சாதனையைப் பெற்றுள்ளது.

தற்போது கரியமில வாயு வெளியேற்றம் வேகமாக அதிகரித்து வரும் போக்கினை சீனா அடிப்படையில் மாற்றி, பசுங்கூட  வாயுவின் வெளியேற்றத்தைப் பயன்தரும் முறையில் கட்டுப்படுத்தியுள்ளது.

உலகில் மிக பெரிய வளரும் நாடாக, பொருளாதாரத்தை வளர்த்து, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி, மாசுபாட்டைக் கட்டுப்படுத்தி, எரிசக்தி பாதுகாப்பைப் பேணிகாக்கும் அதே வேளையில் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துவது எளிதாக இல்லை. இது சீன மக்கள் அனைவரின் நீண்டகால முயற்சியிலிருந்து பிரிக்கப்பட முடியாதது.

எதிர்காலத்தில் சர்வதேச நிலைமை எவ்வாறு மாறிய போதிலும், சீனா வாக்குறுதியை நிறைவேற்றி, பலதரப்புவாதத்திலும், ஒத்துழைப்பு மற்றும் ஒன்றுக்கொன்று நன்மை தருவதிலும் ஊன்றி நின்று, பாரிஸ் உடன்படிக்கையைச் செயல்படுத்துவதற்கு துணை புரியும்.