பலதரப்புவாதத்தில் கிழக்காசியாவின் கூட்டு வளர்ச்சி
2021-10-29 20:22:27

16ஆவது கிழக்காசிய உச்சி மாநாடு அண்மையில் நிறைவடைந்துள்ளது. கையோடு கைகோர்த்து, புதிய ரக கரோனா வைரஸைச் சமாளித்து, பொருளாதார பன்முக மீட்சியை முன்னேற்றுவது, தூய்மையான வளர்ச்சி, ஆசியானின் மைய தகுநிலைக்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட முன்மொழிவுகளை காணொளி வழியாக நடைபெற்ற இவ்வுச்சி மாநாட்டில் சீனா முன்வைத்தது. இது, கிழக்காசிய ஒத்துழைப்புக்கு புதிய உயிராற்றலை அளித்து, நடவடிக்கை மேற்கொண்டு, உண்மையான பலதரப்புவாதத்தை நடைமுறைப்படுத்தியது.

அண்மையில் சீனாவின் மிக உயர் தலைவர், உலக வளர்ச்சி முன்மொழிவை அளித்தார். வலிமைமிக்க, தூய்மையான, ஆரோக்கியமான உலக வளர்ச்சியை முன்னேற்றுவதும், உலக வளர்ச்சி பொது சமூகத்தை உருவாக்குவதும் இம்முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டது.