ஜி-20 நாடுகள் பொறுப்பேற்பதற்கு சீனாவின் பங்கு
2021-10-31 17:11:45

ஜி-20 உச்சிமாநாட்டில் சீன அரசுத் தலைவர் முன்வைத்த 5 முன்மொழிவுகள், சர்வதேசக் கவனத்துக்குப் பொருந்தும் விதம் உள்ளன. அவை, அறைகூவல்களைச் சமாளித்தல் மற்றும் கூட்டு வளர்ச்சி திட்டத்தில் மனித குலத்துக்கு வழிவகுக்கின்றன.

கரோனா நோய் தடுப்பு குறித்து, ஷிச்சின்பிங் சீனாவின் நிலையான நிலைபாட்டை மீண்டும் வலியுறுத்தினார். தடுப்பூசியை, உலகின் பொதுப் பொருளாக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், உலகத் தடுப்பூசி ஒத்துழைப்புக்கான முன்மொழிவையும் முன்வைத்தார்.

சீனா, வெளிநாட்டுத் திறப்பு அளவைத் தொடர்ந்து விரிவாக்கி, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு மேலதிக புதிய உந்து ஆற்றலை ஊட்டி, 20 நாடுகள் குழு, பொறுப்பேற்பதற்குத் துணை புரியும்.