ஜி-20 நாடுகள் குழு நடைமுறை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
2021-11-01 19:03:09

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அக்டோபர் 31ஆம் நாள் காணொளி வழியாக ஜி-20 உச்சிமாநாட்டில் தொடர்ந்து பங்கெடுத்தார். அவர் கூறுகையில், காலநிலை மாற்றம், எரியாற்றல் பிரச்சினை முதலியவை, உலகளவில் இருக்கும் முனைப்பான அறைகூவல்களாகும். இவற்றைச் சமாளிக்க, சர்வதேசச் சமூகம் நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அவர் முன்வைத்த இம்முன்மொழிவுகள், உலகம் வலுவான பசுமையான மற்றும் சுமுகமான வளர்ச்சியைப் படைக்கத் துணை புரிவதோடு, 20 நாடுகள் குழு, ஐ.நாவின் 2030ஆம் ஆண்டின் தொடரவல்ல வளர்ச்சியின் இலக்கை நனவாக்கவும் உதவியளிக்கும்.