கரோனா வைரஸ் தோற்றத்துக்கான ஆய்வை அரசியல் மயமாக்கிய அமெரிக்கா
2021-11-01 14:38:49

கரோனா வைரஸ் தோற்றம் பற்றிய மதிப்பீட்டு அறிக்கையை அமெரிக்கத் தேசிய உளவு இயக்குநர் அலுவலகம் அண்மையில் வெளியிட்டு, மீண்டும் வைரஸ் தோற்றத்துக்கான ஆய்வை அரசியல் மயமாக்கியுள்ளது. உலகப் பல்வேறு நாடுகள் ஒற்றுமையுடன் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நிலைமையில், அமெரிக்காவின் இச்செயல் நகைப்பிற்கிடமானது. அமெரிக்காவில் தான் கரோனா வைரஸ் தோற்றத்துக்கான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் சர்வதேசச் சமூகம் இவ்வறிக்கையின் மூலம் உணர்ந்து கொண்டுள்ளது.

அமெரிக்கா இவ்வறிக்கையை வெளியிட்ட நேரம் கவனிக்கத்தக்கது. இவ்வறிக்கை வெளியிடப்பட்ட அடுத்த நாள், ஜி20 உச்சி மாநாடு ரோம் நகரில் துவங்கியது. கரோனா வைரஸ் பரவல் தடுப்பு இம்மாநாட்டின் முக்கிய அம்சமாகும். அத்துடன், 2வது கட்டத்தின் தோற்ற ஆய்வுப் பணிக்கு உலகச் சுகாதார அமைப்பு ஆயத்தம் செய்து வருகிறது. அமெரிக்கா ஜி20 அமைப்பின் உறுப்பு நாட்டின் பொறுப்புக்கு மீறியதோடு, உலகச் சுகாதார அமைப்பின் பணியில் தலையிடவும் முயன்றது.

அண்மையில், 100 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 300க்கும் மேலான கட்சிகள், சர்வதேச அமைப்புகள் மற்றும் சிந்தனைக் கிடங்குகள், உலகச் சுகாதார அமைப்புக்கு கூட்டறிக்கையை அனுப்பி, கரோனா வைரஸ் தோற்றத்துக்கான ஆய்வை அரசியல் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

கரோனா வைரஸ் தோற்றத்துக்கான ஆய்வு அறிவியல் விவகாரமாகும். அறிவியல் வழிமுறையின் மூலம், உலகப் பல்வேறு நாடுகளின் அறிவியலாளர்கள் ஒத்துழைப்பு மேற்கொண்டால் தான் உண்மையைக் கண்டறிய முடியும்.