சீனாவில் புத்தாக்கத்தின் தகுநிலை உயர்வு
2021-11-03 20:36:24

2020ஆம் ஆண்டுக்கான சீனத் தேசிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப விருது வழங்கும் மாநாடு புதன்கிழமை பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. இவ்விருது பட்டியலை ஆராயும் போது, அறிவியல் தொழில் நுட்பத் திறமைசாலிகளின் மீதான சீனாவின் கவனம், இத்துறையில் பரிமாற்றம் தொடர்பான சீனாவின் திறப்பு ஆகியவற்றை மக்கள் அறிந்து கொள்ள முடியும்.

சீனத் தலைவர்களின் நெடுநோக்கு பார்வையில் திறமைசாலிகளே முதன்மை மூலவளமாகும்.  தற்போது, சீனா உலகளவில் மிக அதிக திறமைசாலிகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். சிறப்புத் தொழில் நுட்பப் பணியாளர்களின் எண்ணிக்கை 2010ஆம் ஆண்டில் இருந்த 5 கோடியே 55 இலட்சத்து 4 ஆயிரம் இலிருந்து 2019ஆம் ஆண்டில் 7 கோடியே 83 இலட்சத்து 98 ஆயிரமாக அதிகரித்துள்ளது. ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 8 ஆண்டுகளாக உலகில் முதலிடம் வகிக்கின்றது.

தவிரவும், அடிப்படை ஆய்வு, உலகளாவிய பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் சீன மற்றும் வெளிநாட்டு அறிவியலாளர்கள் இணைந்து பல்வகை பரிமாற்றத்தையும் ஒத்துழைப்புகளையும் மேற்கொண்டு, அதிக கனிகளைப் பெற்று வருகின்றனர்.