கனெக்டிகட் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான சந்தேகங்கள்
2021-11-04 19:07:01

கனெக்டிகட் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து பற்றிய புலனாய்வு அறிக்கையை அமெரிக்க கடற்படை அண்மையில் வெளியிட்டு, கடலடியிலுள்ள பெயர் தெரியாத ஒரு மலையிந் மீது மோதியதே இவ்விபத்துக்கான காரணமாகும் என்று தெரிவித்தது. ஆனால் மிகவும் தாமதமாக வெளியான இவ்வறிக்கையில் இந்தக் கப்பலின் பயண நோக்கம், விபத்து நிகழ்ந்த இடம், விபத்தால் அணு கசிவு ஏற்பட்டதா, தென் சீனக் கடலின் இயற்கைச் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு முதலியவை பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தற்போது சிக்கலான நிலைமை தோன்றிய சூழ்நிலையில், இந்தக் கப்பல் தென் சீனக் கடற்பரப்பில் ராணுவ உளவுத் தகவல்களைச் சேகரிப்பதற்காக வந்தது என்று  சிலர் கருதுகின்றனர். மேலும், அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் எத்தனை முறை இங்கே வந்துள்ளன என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இவ்வளவு அதிகமான கேள்விகளை எழுப்பும் இந்த விவகாரம் மீது உலகம் கவனம் செலுத்தி வருகின்றது.