தென்சீன கடலில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலின் சூழ்ச்சி என்ன?
2021-11-05 18:56:18

கனெக்டிகட் அணு நீர்மூழ்கிக் கப்பல் விபத்து பற்றி கடலடியிலுள்ள பெயர் தெரியாத ஒரு மலையின் மீது மோதியதாக அறிவித்ததைத் தவிர, அமெரிக்கப் படை, மற்ற விளக்கம் எதையும் கொடுக்கவில்லை.

அக்கப்பலின் எந்த பகுதி சீர்குலைந்தது என்ற கேள்வியில், சீனா மற்றும் அண்டை நாடுகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. ஆயுத நிலை செறிந்த யுரேனியம், இக்கப்பலின் அணு உலைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அதன் எரிபொருள் கசிந்தால், தென் சீன கடலின் மீன் வளம் மற்றும் உயிரினச் சுற்றுச்சூழலுக்குப் பேரழிவு ஏற்படக் கூடும் என்று ராணுவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.