திறப்புப் பணியை விரிவுபடுத்தி வருகின்ற சீனா
2021-11-05 11:00:07

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 4ஆம் நாளிரவு 4வது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியின் துவக்க விழாவில் காணொளி மூலம் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில், வெளிநாடுகளுக்கு சீனா உயர் தரமான திறப்புப் பணி மேற்கொள்ளும் மனவுறுதி மாறாது. உலகின் பல்வேறு நாடுகளுடன் சீனா வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் மனவுறுதி மாறாது. திறப்பு, அனைருக்குமான நலன், சமச்சீர் நிலை, கூட்டு வெற்றி ஆகியவற்றைக் கொண்ட வளர்ச்சித் திசைக்கு பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்தைச் சீனா தொடர்ந்து முன்னேற்றும் மனவுறுதி மாறாது என்றார்.

வெளிநாட்டுத் திறப்பு, தற்போதைய சீனாவின் தெளிவான சின்னமாகும். குறிப்பாக, உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்த்த 20 ஆண்டுகளாக, வாக்குறுதியைப் பன்முகங்களிலும் நிறைவேற்றி, திறப்புப் பணியை இடைவிடாமல் விரிவுபடுத்தி வருகிறது. இது சீனாவின் உள்நாட்டுப் பொருளாதாரத்தை முன்னேற்றியதோடு உலகப் பொருளாதாரத்துக்கும் துணைப் புரிந்துள்ளது.

சீனா வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்த வணிகப் பொருட்கள் மற்றும் சேவையின் ஆண்டு மதிப்பு சுமார் 25ஆயிரம் கோடி அமெரிக்க டாலராகும். மென்மேலும் அதிகமான நிறுவனங்கள் கலந்து கொண்டு வருகின்ற சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி, உலகத்தின் தொழில் நிறுவனங்களுக்கான சீனச் சந்தையின் ஈர்ப்பு ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது.