சீனாவில் அதிகரித்து வரும் ‘உலகின் முதலாவது வெளியீடு’
2021-11-06 19:46:30

ஷாங்காயில் நடைபெற்று வரும் 4ஆவது சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சியில் இயந்திர மனிதன், புதிய எரிசக்தி வாகனம் போன்ற தயாரிப்புகள்,  தொழில்நுட்பம் மற்றும் சேவை ஆகியவை அடுத்தடுத்து  6 முதல் 8ஆம் நாள் வரை காட்சிக்கு வைக்கப்படுகின்றன. அவற்றில் பலவற்றுக்கு உலகளவிலோ ஆசியாவிலோ அல்லது சீனாவிலோ முதல்முறையாக காட்சிக்கு வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தற்போது, சீனாவைத் தளமாகக் கொண்டு, தனது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை முதல்முறையாக அறிமுகம் செய்து வரும் பன்னாட்டு  நிறுவனங்கள் அதிகமாக காணப்படுகின்றன. இதற்கான காரணம் என்ன என்ற வினாவுக்கு விடை தெளிவானது.

ஒருபுறம், இந்த தோற்றம், சீனப் பொருளாதாரத்தின் உயிராற்றலை வெளிக்காட்டுகிறது.  தொழில் நிறுவனங்கள்  சீனச் சந்தை மீதான நம்பிக்கையும் சீன வாய்ப்புகளைப் பயன்படுத்தும் ஆசையையும் வெளிக்காட்டுகிறது.

இக்கண்காட்சியில் கலந்து கொண்டுள்ள பல நிறுவனங்களின் கூற்றைப் போலவே,  4 ஆண்டுக்கால வளர்ச்சியுடன், சீனச் சர்வதேச இறக்குமதி கண்காட்சி,  இந்த நிறுவனங்களுக்கு சந்தை, முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைக் வழங்கி வருகிறது.

மறுப்புறம்,  சீனாவில் தொழில் புரிவதற்கான சூழல் தொடர்ச்சியாக மேம்பாட்டு வருகிறது. குறிப்பாக, அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலகின் தொழில் நிறுவனங்கள் கவலையில்லாமல், புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் புதிய தயாரிப்புகளை சீனச் சந்தையில் விற்பனை செய்ய விரும்புகின்றன.

வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்குவதில் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும் சீனா,  சர்வதேச நிறுவனங்களுக்கு நம்பிக்கை தருவது என்பது இதற்கு மிக முக்கிய ஆதாரமாகும்.