ஆப்கான் பைன் கொட்டை விற்று தீர்ந்து விட்டது ஒரு துவக்கம் தான்!
2021-11-09 10:46:09

ஷாங்காயில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 4ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியின் நேரலை அறையில் 6ஆம் நாளிரவு மொத்தம் 26 டன் எடையுடைய பைன் கொட்டைகள் குறுகிய சில நிமிடங்களுக்குள் விற்று தீர்ந்து விட்டன. அதனுடன் “போரின் பாதிப்பில் அல்லல்பட்டிருந்த மக்களுக்கு உதவியளிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்”, “ஆப்கான் பைன் கொட்டையை வாங்க வேண்டும், ஏனென்றால் அங்குள்ள மக்களின் வாழ்க்கை கடினம்” போன்ற சீன இணையப் பயனர்களின் பின்னூட்டங்களும் அன்புணர்வு நிறைந்தவை.

ஆப்கான் பைன் கொட்டை விற்று தீர்ந்து விட்டது எதேச்சையாக நிகழ்ந்ததல்ல. இறக்குமதிப் பொருட்காட்சியின் மூலம், வளரும் நாடுகள், குறிப்பாக வளர்ச்சி குன்றிய நாடுகளின் உற்பத்திப் பொருட்களுக்கு விற்பனை மேடையை உருவாக்குவதன் சாதனை இதுவாகும். உண்மையான பலதரப்புவாதத்தை சீனா பேணிக்காத்து, உலகத்துடன் சந்தை வாய்ப்பைப் பகிர்ந்து கொள்வதன் இயல்பான விளைவாக இதுவும் ஆகும்.

நடப்புப் பொருட்காட்யில் வளர்ச்சி குன்றிய 33 நாடுகளைச் சேர்ந்த சுமார் 90 தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. முன்பு போலவே சீனா, அவற்றுக்கு போதுமான வசதிகளை வழங்கியுள்ளது. பகிர்வு என்பது இறக்குமதிப் பொருட்காட்சியின் அடிப்படை இயல்பு. உலகப் பொருளாதார மீட்சிக்கு இது மிக முக்கியமானது.