பொதுவான செழிப்பு எதிர்காலத்தை நோக்கி செல்லும் ஆசிய-பசிபிக்
2021-11-11 20:00:35

உலகப் பொருளாதாரம் வளர்ந்து வரும் முக்கிய இடமாக திகழும் ஆசிய பசிபிக் பிராந்தியம், கோவிட்-19 தொற்று மற்றும் வெளியுலகத்தில் இருந்து அரசியல் தலையீடு போன்ற சாவல்களை எதிர்கொண்டுள்ளது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் புதிய வாய்ப்புகளும் புதிய அறைகூவல்களும் காணப்படுகின்றன. ஒருபுறம், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஆசிய பசிபிக் பொருளாதாரம் மீட்சி அடைந்து வரும் போக்கு தோன்றியுள்ளது. பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டாளி ஒப்பந்தம் (RCEP), பசிபிக் கடந்த கூட்டுறவுக்கான விரிவான மற்றும் முன்னேறிய ஒப்பந்தம் (CPTPP) ஆகிய பலதரப்பு முறைமைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளதால், ஆசிய பசிபிக் பொருளாதாரம் மீட்சியடைவதற்கு புதிய உந்து சக்தியை கொண்டு வருகிறது. ஆனால், மறுபுறம், பனிப் போர் சிந்தனையுடனும் ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்துடனும்,  அமெரிக்கா, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் முத்தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட குழுக்களை உருவாக்கியுள்ளதால், அது ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஒத்துழைப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏபெக் அமைப்பின் தொழில் மற்றும் வணிகத் துறையின் தலைவர்களின் மாநாட்டில் உரைநிகழ்த்துகையில்,  முன்னுக்கு நோக்கி பார்த்து, முன்னுக்கு செல்லும் வழியில் ஊன்றி நிற்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இச்சூழலில், ஆசிய பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு, “சிலருக்கு தோல்வியும் சிலருக்கு வெற்றியும் கிடைக்கும் “ அரசியல் விளையாட்டு அல்ல. மாறாக, இத்தகைய ஒத்துழைப்பு, பல்வேறு தரப்புகளும் சாதனைகளைப் படைக்கக் கூடிய திறந்த மேடையாக திகழ்கிறது.  திறப்பு மற்றும் ஒத்துழைப்பு என்ற மனப்பான்மையுடன்,  ஆசிய-பசிபிக் என்ற பெரிய கப்பல், பொதுவான செழிப்பு எதிர்காலத்துக்கு செல்ல வேண்டும்.