அன்னிய வணிகர்களை ஈர்க்கும் சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி
2021-11-11 10:38:56

சீனாவில் நடைபெற்ற சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில் உள்ள இணைய மேடை ஒன்றில் ரஷியாவின் ஒரு உணவு தயாரிப்பு நிறுவனம் சில வினாடிகளுக்குள் பத்து லட்சத்துக்கு அதிகமான ரென் மின் பி யுவானை ஈட்டியுள்ளது என்று ரோஸிஸ்கயா கெஸட்டா எனும் ரஷிய செய்தித்தாள் அண்மையில் வெளியிட்ட கட்டுரையில் தெரிவித்தது.

இத்தொழில் நிறுவனம் மட்டுமல்லாமல், அதிக தொழில் நிறுவனங்கள் இப்பொருட்காட்சியின் உயிராற்றலை முழுமையாக உணர்ந்துள்ளன. இப்பொருட்காட்சியில் ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஆண்டு வியாபாரத் தொகை, 7072 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இப்பொருட்காட்சியில் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் அதிக பயன் பெறுவதை இது வெளிக்காட்டியுள்ளது.

நடப்புப் பொருட்காட்சியில் சுமார் 200 அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் பங்கெடுத்து, மிக அதிக பதிவை எட்டியுள்ளன. ஆஸ்திரேலியாவின் விக்டோரிய மாநில அரசு, இம்மாநிலத்தின் பத்துக்கு அதிகமான தொழில் நிறுவனங்கள் பொருட்காட்சியில் கலந்து கொள்வதற்கு நிதியுதவி வழங்கியுள்ளது கவனிக்கத்தக்கது.

சீனாவின் மாபெரும் சந்தை, பொருளாதார மீட்சியினால் ஏற்பட்டுள்ள அதிக தேவைகள், உயர் தர வளர்ச்சிக்குத் திரும்புவது ஆகியவை உலகிற்கு அதிகப்படியான முன்பதிவு படிவங்களைக் கொண்டு வந்துள்ளன. அதோடு, பன்னாடுகள் கோவிட் 19 நோயை வென்றெடுக்க இயக்கு ஆற்றலை இவை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.