சீன மக்கள் குடியரசு நிறுவிய விழா
2021-11-11 20:21:58

இந்த ஓவியத்திற்கு “சீன மக்கள் குடியரசு நிறுவிய விழா”என பெயரிடப்பட்டுள்ளது. சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டு 3 ஆண்டுகளுக்குப் பிறகு 1952ஆம் ஆண்டு வரையப்பட்ட ஓவியம் இதுவாகும். சீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்டது என்ற முக்கிய வரலாற்று நிகழ்வை இந்த ஓவியம் வெளிக்காட்டுகிறது.

1949ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள், பெய்ஜிங்கிலுள்ள தியன்ஆன்மென் சதுக்கத்தில் 3லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றுக்கூடி இந்த வரலாற்று நிகழ்வை நேரில் பார்வையிட்டனர். அன்று, மாவோ சேதுங், “சீன மக்கள் குடியரசின் மத்திய அரசங்கம் நிறுவப்பட்டது” என அறிவித்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், இது வரை சீனாவில் மாபெரும் மாற்றம் காணப்பட்டுள்ளது. சீன வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் இந்த முன்னேற்றம் வியப்பாக கருதப்படுகிறது.