சீனாவின் ஒன்றிணைப்பு என்பது, தடுக்க முடியாத வரலாற்றுப் போக்காகும்
2021-11-12 10:48:43

தைவான் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் திறனைக் கொண்டிருப்பதை அமெரிக்கா உறுதிபடுத்தும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்க் கூறினார்.

அண்மையில், தைவான் நீரிணை இரு கரை நிலைமை, தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றது. ஒருபுறம்,  தைவான் அதிகார வட்டாரம் ஒரே சீனா என்ற கட்டுக்கோப்பை முறியடிக்கப் பலமுறை முயன்று, பிரிவினைவாத நடவடிக்கைகளை விரிவாக்கி வருகின்றது. மறுபுறம், அமெரிக்க அரசியல்வாதிகள் "தைவான் பிரிவினைவாத" சக்திகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஒரே சீனா என்ற கோட்பாட்டில் ஊன்றி நின்று, தைவான் பிரிவினைவாத நடவடிக்கைகளையும் வெளிநாடுகளின் தலையீட்டையும் உறுதியாக எதிர்க்க வேண்டும் என்று 11ஆம் நாள் வெளியான சீன கம்யூனிஸ்ட் கட்சி 19வது மத்திய கமிட்டியின் 6வது முழு அமர்வின் தீர்மானத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் சீனாவின் ஒன்றிணைப்பு என்பது, தடுக்க முடியாத வரலாற்றுப் போக்காகும். அரசு இறையாண்மையையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பேணிகாக்கும் சீன மக்களின் உறுதியான மனஉறுதி மற்றும் வலிமையான திறனை அமெரிக்கா குறைத்து மதிப்பிடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.