சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் மேலாதிக்கம் இல்லை
2021-11-13 16:25:39

சீனா ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் உதவியுடன் அதன் நெடுகிலுள்ள நாடுகளின் பொது மக்கள் மேலும் அருமையான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். ஆனால் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானம் முன்னேறி வருவதுடன், இதன் மூலம் சீனா பிரதேச மேலாதிக்கத்தை மேற்கொண்டு வருவதாக பனிப்போர் சிந்தனையுடன் செயல்படும் சில மேலை நாட்டவர்கள் ஆதாரமின்றி ஊகம் செய்து வருகின்றனர். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவைப் புரிந்து கொள்ள விரும்பினால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உலகப் பார்வையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த 11ஆம் நாள் வெளியிடப்பட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மத்தியக் கமிட்டியின் 6ஆவது முழு அமர்வு அறிக்கையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றதற்கான இரகசியம் பற்றிய சர்வதேச பிரமுகர்களின் கேள்விக்குப் பதிலளிக்கப்பட்டது. முழு உலகத்தையும் கருத்தில் கொண்டிருப்பது என்பது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உலகப் பார்வையை முக்கியமாக வெளிப்படுத்தியுள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது முதல் உலகிற்குப் பங்காற்ற வேண்டும் என்ற தொலைநோக்கு குறிக்கோளை நிர்ணயித்துள்ளது.

நவ சீனா நிறுவப்பட்ட பிறகு, சீனா எந்த மோதலையும் தூண்டவில்லை, எந்தப் போரையும் தொடுக்கவில்லை, எந்த நாட்டையும் ஆக்கிரமிக்கவில்லை. சர்வதேச மற்றும் பிராந்திய அமைதியைப் பேணிக்காப்பதில் சீனா ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றி வருகிறது.

கூட்டு வளர்ச்சியை மேம்படுத்துவதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உலகின் முதலாவது பெரிய கட்சியின் பொறுப்பை வெளிக்காட்டியுள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் பங்கு தொடர்ந்து 15 ஆண்டுகளாக முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

சீனத் தேசத்தின் பண்பில் மேலாதிக்கம் இல்லை. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாட்டில் ஒருபோதும் மேலாதிக்கம் இல்லை.