© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ஒரு நாட்டின் ஜனநாயக அமைப்புமுறை நல்லதா இல்லையா என்பதற்கு, மக்களின் தகுநிலை எடுத்துக்காட்டாகும்.
தற்போதைய மேலை நாடுகளின் ஜனநாயகம் நெருக்கடியில் உள்ளது என்று ஸ்பெயின் எல் பய்ஸ் நாளேட்டின் இணையதளத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
உண்மையான ஜனநாயகம் என்னவென்றால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 19ஆவது மத்தியக் கமிட்டியின் 6ஆவது முழு அமர்வின் பொது அறிக்கையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். முழு நடைமுறை ஜனநாயகத்தை வளர்த்து, மக்களே உரிமையாளர்களாக இருப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று இதில் வலியுறுத்திக் கூறப்பட்டது.
ஒரு நாடு ஜனநாயக நாடாக இருப்பதற்கு, அதன் மக்கள் உரிமையாளர்களாக இருப்பதுதான் முக்கியமானதாகும். ஜனநாயகம் அலங்காரப் பொருள் அல்ல. அதன் மூலம் மக்களுக்கு தீர்க்க வேண்டிய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் விளக்கிக் கூறினார். அவரது இத்தகைய விளக்கங்கள், சீனாவின் ஜனநாயக அரசியல் பற்றி வெளியுலகம் புரிந்து கொள்வதற்கான திறவுகோலாகும்.
ஒரு நாட்டின் ஜனநாயகம் பற்றி அந்நாட்டின் மக்கள் நன்கு தெரிந்து கொள்வர். அமெரிக்காவின் மக்கள் கருத்து கணிப்பு நிறுவனம் ஒன்றின் புதிய கணிப்பு முடிவின்படி, சீனாவின் ஆளும் கட்சி மற்றும் அரசு மீதான சீன மக்களின் மனநிறைவு முறையே 95 விழுக்காடு மற்றும் 98 விழுக்காடு ஆகும். சீன மக்களின் ஜனநாயக உரிமை நலன்கள் தொடர்பான கேள்விக்கு இது தலைசிறந்த பதிலாகும்.