அமெரிக்கா, உலகத்தை ஏமாற்றம் அடையச் செய்யக் கூடாது
2021-11-15 20:01:04

பிரிட்டனின் கிளாஸ்கோவில் நடைபெற்ற COP 26 கூட்டத்தில் 13ஆம் நாள் எட்டப்பட்ட தீர்மான ஆவணத்தில், பாரிஸ் உடன்படிக்கையின் நடைமுறையாக்க விதிகள் குறித்த ஒத்த கருத்து உருவாக்கப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்மான ஆவணம் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான திறவுகோல், காலநிலை மாற்றத் துறையிலான சீன-அமெரிக்க ஒத்துழைப்பாகும். கடந்த 10ஆம் நாள் இருநாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கை, உலக காலநிலை மாற்றச் சமாளிப்புக்கு ஊக்கமளித்துள்ளது.

உலகில் மிகப் பெரிய வளரும் நாடான சீனா எப்போதுமே சொல்லுக்கு இணங்க செயல்பட்டு வருகிறது. ஆனால், அமெரிக்காவின் செயல்திறன் பற்றி சர்வதேச சமூகம் கவலைப்படுகிறது. அமெரிக்கா உலகிற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது. இருதரப்பு கூட்டறிக்கையையும் கிளாஸ்கோ தீர்மானத்தையும் அது நடைமுறைப்படுத்தி, பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்பேற்கும் கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டும், கார்பன் வெளியேற்றத்தைப் பெருமளவில் குறைப்பதில் பொறுப்பேற்கவும், நிதி, தொழில் நுட்பம், திறன் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் வளரும் நாடுகளுக்கு உதவியளிக்கவும் வேண்டும்.

உலகிற்கு நடைமுறை செயல்கள் தேவை. அமெரிக்கா தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.