சீன மற்றும் அமெரிக்க உறவை சரியான பாதையில் முன்னேற விரும்பும் சீனா
2021-11-17 14:29:15

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் ஆகியோர் பெய்ஜிங் நேரப்படி நவம்பர் 16ஆம் நாள் முற்பகல், காணொலி வழியாக பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தை, மனம் திறந்த நிலையிலும் ஆக்கப்பூர்வமாகவும் நடைபெற்று, சாரம்ச ரீதியான சாதனை பெற்றுள்ளது. இரு தரப்புகளுக்கிடையே பரஸ்பரம் புர்ந்துணர்வை அதிகரிக்க இது துணைபுரியும்.

தற்போது சீன-அமெரிக்க உறவு நாற்சந்தியில் இருக்கிறது. நெடுநோக்கில் சீனா மீது அமெரிக்கா கடும் தவறான முடிவு எடுத்து, சீனாவின் வளர்ச்சியை இயன்ற அளவில் தடுக்கிறது. இந்நிலைமையில், சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்கள நடத்திய பேச்சுவார்த்தை, இரு தரப்புகளுக்கிடையேயான தவறான எண்ணங்களை தவிர்க்கவும் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை முன்னேற்றவும் துணைபுரியும்.

இப்பேச்சுவார்த்தையில் ஷிச்சின்பிங் கூறுகையில், சீன வளர்ச்சி பாதை மற்றும் நெடுநோக்கு குறித்து ஆழந்த முறையில் விவரித்தார். புதிய காலத்தில், ஒன்றுக்கொன்று மதிப்பு அளித்தல், சமாதான சக வாழ்வு, ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறுதல் ஆகிய மூன்று கோட்பாடுகளில் சீனாவும் அமெரிக்காவும் ஊன்றி நிற்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் இப்பேச்சுவார்த்தையில் கூறுகையில், அமெரிக்க-சீன உறவை சீர்குலைக்க முடியாது என்று தெரிவித்தார். சீனாவின் அமைப்புமுறையை மாற்ற அமெரிக்கா முயலவில்லை. கூட்டாணி உறவை வலுப்படுத்துவதன் மூலம் சீனாவை எதிர்க்க அமெரிக்கா விரும்பவில்லை. சீனாவுடன் மோதல் நடத்த அமெரிக்கா விருப்பவில்லை. தைவான் சுதந்திரம் பெறுவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கவில்லை என்று பைடன் எடுத்து கூறினார். அமெரிக்கா சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும், சர்வதேச நம்பிக்கையைப் பெற வேண்டும் என்றும் விரும்புகின்றோம்.