மேலை நாடுகளின் பொய் கூற்றை உடைத்த சின்ஜியாங்கின் வளர்ச்சி
2021-11-17 21:04:40

கடந்த சில ஆண்டுகளாக, சின்ஜியாங்கின் யீலீ கசாக் தன்னாட்சி சோ அரசின் முயற்சியுடன், அதன் நிர்வாகத்தின் கீழ் வரும் ஹோர்கொஸ் நகரின் சிறப்புமிக்க நாண் எனும் உணவு மத்திய ஆசிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின்படி விரைவான வளர்ச்சி கண்டுள்ளதற்கு எடுத்துக்காட்டாக இது திகழ்கிறது.

அண்மையில் நடைபெற்ற சின்ஜியாங் வளர்ச்சி கருத்தரங்கில் சீனாவுக்கான அர்ஜெண்டினா தூதர் தனது அனுபவங்களோடு ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானத்தில் சின்ஜியாங்கின் முக்கிய பங்கினைச் சுட்டிக்காட்டியதோடு, அனைவரும் அங்கே பயணம் மேற்கொண்டு உண்மையை அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

திறப்பு என்பது, சின்ஜியாங்கின் வளர்ச்சிக்கான முக்கியக் காரணி. தற்போது ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளுடன் தொடர்பு கொள்வதற்கான முக்கிய ஊடுவழியாகவும், மேற்கு நோக்கி திறந்து பன்முக திறப்பைச் செயல்படுத்தும் கட்டமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகவும் சின்ஜியாங் மாறியுள்ளது.

திறப்பு விரிவாகத்திலிருந்து பெரும் பயன் அடைந்தவர்கள் சின்ஜியாங் மக்கள் ஆவர். உண்மைக்கு முன், மேலை நாடுகளின் சீன எதிர்ப்பு சக்திகள் உருவாக்கும் பொய்கள் எளிதில் உடைக்கப்பட்டு நகைப்பிற்கிடமானது.