ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு உலகிற்கு வழங்கிய நன்மைகள்
2021-11-20 18:35:25

மக்களுக்கு நன்மை தருவது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர் தர வளர்ச்சி இலக்குகளில் ஒன்றாகும் என்று 19ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்துக்கான 3ஆவது கருத்தரங்கில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

செர்பிய அரசுத் தலைவர் அலிக்சன்டர் வுசிசி முன்பு கூறுகையில், சீனாவின் தொழில் நிறுவனங்கள் தனது நாட்டில் மொத்தம் 50 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியது. இது, செர்பியா போன்ற ஒரு சிறிய நாட்டைப் பொறுத்தவரை பெரும் உதவியாகும் என்று தெரிவித்தார்.

உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, 2030ஆம் ஆண்டில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டப்பணி, உலகளவில் 76 இலட்சம் மக்களை தீவிர வறுமையிலிருந்து மீண்டுவர உறுதுணை செய்யும்.

தாங்கள் மட்டுமல்ல, உலக மக்களும் செழுமையாக வாழ வேண்டும் என்பது, சீன மக்களின் விருப்பமாகும்.