சீன-ஆப்பிரிக்க உறவின் மீதான நம்பிக்கை மாறாது
2021-11-23 21:20:16

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்தோனி பிரிகன் அண்மையில் கென்யா, நைஜீரியா, செனகல் ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தில் சீன-ஆப்பிரிக்க உறவில் சிக்கலைகளை உருவாக்க அவர் முயற்சி மேற்கொண்டதாகக் கவனிக்கப்பட்டது.

நண்பர்கள் நேர்மையுடன் ஒருவருக்கொருவர் நடந்துகொள்வார்கள். நீண்டகாலமாக, அமெரிக்கா ஆப்பிரிக்க நாடுகளுக்கு அதிக வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால், அதன் வாக்குறுதியின்படி செயல்படவில்லை அல்லது கூடுதலான அரசியல் நிபந்தனைகளைச் சேர்த்துக்கொண்டது. ஆப்பிரிக்காவின் வளர்ச்சியின் மீது அது உண்மையாக கவனம் செலுத்தவில்லை என்பதை இது காட்டுகின்றது.

அதற்கு மாறாக, சீனா எப்போதும் நேர்மையுடன் ஆப்பிரிக்க நாடுகளுடன் பழகி வருகின்றது. எடுத்தக்காட்டாக, ஜிம்பாப்வேயில் போடப்பட்ட கரோனா தடுப்பூசிகளில் 95 விழுக்காட்டக்கு மேல் சீனாவால் வழங்கப்பட்டவை. கடந்த 12 ஆண்டுகாலமாக, சீனா ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய வர்த்தக கூட்டாளி நாடாக உள்ளது.

ஆப்பிரிக்காவின் ஒரு புகழ்பெற்ற பொது மக்கள் கருத்து கணிப்பு நிறுவனம் வழங்கிய அறிக்கையின்படி, ஆப்பிரிக்காவில் மிகச் செல்வாக்குடைய நாடுகளின் வரிசையில் சீனா முதலிடம் வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.