ஜனநாயகத்தைக் கருவியாக கொண்டு குழு அரசியல் ஈடுபடும் அமெரிக்கா
2021-11-26 10:52:22

தலைவர்கள் ஜனநாயக உச்சிமாநாட்டில் பங்கேற்குமாறு தைவானுக்கு அழைப்பு விடுத்ததாக அமெரிக்கா அண்மையில் அறிவித்தது. அமெரிக்காவின் இச்செயல், ஜனநாயகத்தைச் சாக்குபோக்காக கொண்டு சீனாவின் உள்விவகாரத்தில் தலையிடுவதாகும். ஒரே சீனா என்ற கோட்பாட்டுக்குப் புறம்பாக ஜனநாயகத்தை கடுமையாகச் சீர்குலைக்கும் செயலுமாகும். இதனை உறுதியாக எதிர்ப்பதாகச் சீனா தெரிவித்தது.  

ஒரே சீனா என்ற கோட்பாடு உலகில் ஏற்கப்பட்டுள்ள சர்வதேச உறவு வரையறையாகும். தைவான் சீனாவின் ஒரு பகுதியாகும். சர்வதேச சட்டத்தில் அதற்கு வேறு தகுநிலை இல்லை. ஜனநாயகம் குழு அரசியலை செய்வதற்கான அமெரிக்காவின் கருவியாகும் என்பதை சர்வதேச வரையறைகளை மீறி தைவான் சுதந்திர சக்திக்கு ஆதரவளிக்கும் அமெரிக்காவின் இந்த செயலின் மூலம் முழு உலகமும் உணர்ந்து கொள்ளும்.