வலுவான சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு
2021-11-26 21:25:20

புதிய யுகத்தில் சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு என்ற வெள்ளையறிக்கையை சீன அரசு 26ஆம் நாள் வெளியிட்டது. இரு தரப்பு ஒத்துழைப்பில் காணப்பட்ட முன்னேற்றங்கள் இதில் பன்முகங்களிலும் மீளாய்வு செய்யப்பட்டன. இதில் பயனுள்ள சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு இரு தரப்பு மக்களுக்கு நடைமுறை நலன்களைக் கொண்டு வந்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

எடுத்துக்காட்டாக தற்போது வரை சீனா ஆப்பிரிக்க நாடுகளுக்கு மொத்தம் 20 கோடி கரோனா தடுப்பூசிகளை விநியோகித்துள்ளது. அதேவேளையில், 2020ஆம் ஆண்டின் இறுதியில் காலாவதியான 15 ஆப்பிரிக்க நாடுகளின் வட்டி இல்லா கடன்களையும் சீனா தள்ளுபடி செய்தது.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் கட்டுக்கோப்புக்குள் ஆப்பிரிக்க நாடுகளில் அடிப்படை வசதிகளின் கட்டுமானத்துக்கு சீனா உதவி வழங்கி, 10 ஆயிரம் கிலோமீட்டருக்கு அதிகமான இருப்புப்பாதை மற்றும் ஒரு இலட்சம் கிலோமீட்டர் நெடுஞ்சாலை கட்டியமைத்துள்ளது.

எண்ணியல் பொருளாதாரம், விண்வெளிப் பயணம் உள்ளிட்ட புதிய துறைகளிலும் ஆப்பிரிக்காவுக்குப் பல அறிவியல் தொழில் நுட்ப திறமைசாலிகளைச் சீனா பயிற்றுவிட்டுள்ளது.