முன்பு போலவே வாக்குறுதியை நிறைவேற்றி வரும் சீனா
2021-11-30 20:32:57

ஜிம்பாப்வே நாட்டின் ஒரு முக்கிய தொலைக்காட்சி நிறுவனம் சமீபத்தில் ஆவணப் படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. சீனாவின் தடுப்பூசிகளின் உதவியால், அந்நாட்டின் விக்டோரியா ஃபால்ஸ் நகரில் உள்ள மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு கோவிட்-19 பாதிப்பு விகிதம் குறைவு, உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று இந்த ஆவணப் படத்தில் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய கதை ஆப்பிரிக்காவின் ஒரு நகரில் நிகழ்ந்தது மட்டுமல்ல. சீனா, ஆப்பிரிக்க நாடுகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், வறுமை குறைப்பு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட 9 துறைகளிலான திட்டப்பணிகளைக் கூட்டாக செயல்படுத்துவதாக சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 29ஆம் நாள் சீன- ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் அமைச்சர் நிலைக் கூட்டத்தில் அறிவித்தார். இந்த திட்டப்பணிகளில், ஆப்பிரிக்காவுக்கு 100 கோடி டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகளை மேலதிகமாக  வழங்கும் என சீனா வாக்குறுதி அளித்துள்ளது.  அவற்றில், 60 கோடி டோஸ் தடுப்பூசிகள் நன்கொடையாக அளிக்கப்படும். எதிர்காலத்தில் இந்த 9 பெரிய திட்டப்பணிகள், ஆப்பிரிக்காவின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் விதமாகவும், ஆப்பிரிக்க மக்களின் நலன்களை மேம்படுத்தும் விதமாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

2015ஆம் ஆண்டு 10 பெரிய ஒத்துழைப்புத் திட்டங்கள் முதல், 2018ம் ஆண்டு 8 பெரிய நடவடிக்கைகள் வரை,  தற்போது 9 பெரிய திட்டப்பணிகளுடன் சேர்ந்து, சீன – ஆப்பிரிக்க உறவு, புதிய கட்டத்தில் நிற்கிறது. எதிர்காலத்தை நோக்கி செல்லும் வேளையில் சீனா முன்பு போலவே வாக்குறுதியை நிறைவேற்று வருவது சுட்டிக்காட்டத்தக்கது.