ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஜனநாயக உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு அமெரிக்கா அழைப்பு விடுக்குமா?
2021-12-01 20:11:42

மனித உரிமை மற்றும் உயிர் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தினால், இச்சம்பவத்துக்கு காரணமானவரைத் தேட வேண்டும் என்று ஆப்கானிஸ்தானின்  ஜமரை குர்பன்ஜாடா குற்றஞ்சாட்டினார். 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள், காபூல் சர்வதேச விமான நிலையம் குண்டுவெடிப்புத் தாக்குதலுக்குள்ளானதைத் தொடர்ந்து, அமெரிக்காவை தலைமையாக்க கொண்டுள்ள வெளிநாட்டுப் படையினர் அப்பாவி மக்கள் மீது தூப்பாக்கி சூடு நடத்தினர். இச்சம்பவத்தில், ஜமரை குர்பன்ஜாடா தனது மகனை இழந்து விட்டார்.

மேலும், பிரிட்டனின் ஆய்வு நிறுவனமான “ஏர்வார்ஸ்” வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த 20 ஆண்டுகளில், அமெரிக்க படை தொடுத்த வான் தாக்குதல்களில் குறைந்தது 22 ஆயிரம் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

அமெரிக்க படை, ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்களைக் கொலை செய்த குற்றத்துக்கு தற்போது வரை தீர்ப்பு கிடைக்கவில்லை. இந்தப் பின்னணியில் தான், அமெரிக்கா, ஜனநாயக உச்சி மாநாட்டை நடத்துகிறது. இது குறித்து, மக்களிடையே ஒரு கேள்வி எழுந்துள்ளது. அதாவது, ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்று தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கும் விதம், அமெரிக்க அரசியல்வாதிகள் அழைப்பு விடுப்பார்களா?

ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் பற்றி விவாதிக்க வேண்டும் என்று அமெரிக்கா உண்மையாக விரும்பினால், ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்க வேண்டியது அவசியம். இதன் மூலம்,  20 ஆண்டுகளில்  அமெரிக்கா மேற்கொண்டுள்ள ‘ஜனநாயக மறுசீரமைப்பு’ ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு வந்துள்ள விளைவுகளை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.