லிதுவேனியா சர்வதேச சமூகத்துக்கு பொறுப்புடன் பதில் அளிக்க வேண்டும்
2021-12-01 15:38:09

சில நாட்களுக்கு பிறகு அமெரிக்காவின் தலைமையில் கூறப்படும் ஜனநாயக உச்சி மாநாடு துவங்கவுள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் நாடுகளில் லிதுவேனியாவும் ஒன்றாகும். இது வேடிக்கையான சம்பவம். உலகின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமையைப் பாதுகாக்கும் வகையில் இவ்வுச்சி மாநாட்டை நடத்துகிறது என அமெரிக்க தரப்பு கூறியிருந்தது. மனித உரிமை விசயத்தில் லிதுவேனியாவின் செயல்களைப் பார்க்கலாமா?

ஐரோப்பாவில் மீண்டும் அகதிகள் நெடுக்கடி ஏற்பட்டுள்ளது. லிதுவேனியா மற்றும் பெலாரஸ் எல்லைப் பகுதியில் தங்கியிருந்த அகதிகளை திடீரென லிதுவேனிய ராணுவ வட்டாரம் நாய்களை வைத்து கடிக்க வைத்தது. இதில் இரண்டு அகதிகள் உயிரிழந்தனர் என்று செய்தி ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வெளியிடப்பட்டுள்ள இந்த தகவல்கள் சர்வதேச சமூகத்துக்கு அதிர்ச்சி தந்துள்ளன. லிதுவேனியா மனித உரிமையை மீறிய சம்பவங்களில் இது சிறிய பகுதி மட்டுமே. வரலாற்றில் யூதர்களைக் படுகொலை செய்யும் சம்பவங்கள் லிதுவேனியாவில் நடைபெற்றன. தற்போது வரை அந்நாட்டில் யூதர்கள் மற்றும் இதர சிறுபான்மை தேசிய இன மக்கள் மீதான கடும் பாகுபாடு இன்னும் நிலவுகிறது. அவர்களின் மருத்துவ சிகிச்சை, பயணம் முதலிய உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளன. அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, 2019ஆம் ஆண்டு நடுப்பகுதி வரை லிதுவேனியாவில் உள்ள யூதர் குடியசிருப்புகளில் யூதர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்குள் குறைந்திருந்தது.

ஜனநாயகம் மற்றும் மனித உரிமையைப் பாதுகாத்துள்ளதாக லிதுவேனியா கூறியிருப்பது வேடிக்கையாகும். மேலை நாடுகளிடம் ஆதரவு மற்றும் பாதுகாப்பை நாடும் போக்கில், வெள்ளையர் முதன்மை, இனவெறி மற்றும் புதிய நாச்சியம் ஆகியவை இணைந்து, மனித உரிமைகளை மீறிய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தது, மனித உரிமை துறையில் லிதுவேனியாவின் இரட்டை வரையறையை வெளிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. லிதுவேனியா இதை சுய மதிப்பீடு செய்து, சர்வதேச சமூகத்துக்கு பொறுப்புடன் பதில் அளிக்க வேண்டும்.