© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
அமெரிக்க கண்டத்தில் பழங்குடியினத்தவரான செவ்விந்தியர்கள், வட அமெரிக்கக் கண்டத்தில் முதற்கட்டத்தில் குடியேறியவர்களுக்கு உதவி அளித்தனர். ஆனால், இனப்படுக்கொலை மற்றும் இனவெறித் தாக்குதல் ஆகியவற்றை செவ்விந்தியர்கள் எதிர்கொள்ள நேரிட்டனர். இது குறித்து நியூயார்க் டைம்ஸ் எனும் நாளிதழ் விமர்சித்த போது, அமெரிக்கா, செவ்விந்தியர்களைக் கையாண்ட செயல், இந்நாட்டின் வரலாற்றில் மிக அவமானகாரமான அத்தியாயமாகத் திகழ்கிறது என்று தெரிவித்தது.
இந்நிலையில், ஜனநாயக உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கும் அமெரிக்க அரசியல்வாதிகள், அமெரிக்காவில் பழங்குடியினத்தவர்களின் குரல் மற்றும் குற்றச்சாட்டுக்களைக் கேட்காதது போல பாசாங்கு செய்யக் கூடாது.
அமெரிக்காவில் மிகக் கடுமையான பிரச்னையாக இருப்பது இனவெறி என்று 74 சதவீத அமெரிக்கர்கள் கருதுவதாக பியூ ஆராய்ச்சி மையம் அக்டோபரில் வெளியிட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கெங்கும் காணப்படும் இனவாதம், அமெரிக்கா கூறிவரும் ஜனநாயகம் தன் இயல்பை இழந்து வருவதற்கு ஒரு வலுவான எடுத்துக்காட்டு. ஹர்வார்டு பலக்கலைக்கழகத்தின் கென்னடி கல்லூரியின் அரசியல் ஆய்வகம் சமீபத்தில் வெளியிட்ட கருத்து கணிப்பின் முடிவின்படி, அமெரிக்க ஜனநாயகம், குழப்பம் அல்லது தோல்விக்குள் சிக்கியுள்ளது என்று 52 விழுக்காட்டு அமெரிக்க இளைஞர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்க மக்கள், அமெரிக்காவின் ஜனநாயகம் குறித்து ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். அப்படி இருக்கையில், இத்தகைய ஜனநாயக உச்சி மாநாட்டை நடத்த அமெரிக்கா துணிவுடன் செயல்படுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.