கனவை நனவாக்கிய சீன உயர்வேக தொடர்வண்டி
2021-12-04 16:08:13

டிசம்பர் 3ஆம் நாள் 16:44 மணிக்கு சீன-லாவோஸ் இரு நாடுகளின் அரசுத் தலைவர்கள் காணொளி வழியாக தொடர்வண்டி புறப்படும் உத்தரவை வழங்கினர். சீனாவையும் லாவோஸையும் இணைக்கும் இருப்புப் பாதை அதிகாரப்பூர்வமாக இயங்க துவங்கியது.

இந்த இருப்புப் பாதை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு மூலம் லாவோஸ் மக்களுக்கு கொடுத்த அன்பளிப்பு பொருளாகும்.

இந்த இருப்புப் பாதை, நிறைய வாய்ப்புகளை உருவாக்கும். மக்களின் போக்குவரத்துக்கு வசதி அளிப்பதோடு, இந்த வழியிலுள்ள சுற்றுலா, வேளாண்மை, நீர்வளம் ஆகிய வளர்ச்சிக்கும் நகரமயமாக்கத்திற்கும் துணை புரியும்.

இந்த இருப்புப் பாதை, நம்பிக்கையை கொண்டு வரும் பாதை. 2016ஆம் ஆண்டு இந்த ஆக்கப்பணி துவங்கியது முதல் இப்போது வரை, 5000க்கு மேலான உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் லாவோஸ் இளைஞர்கள் நிறைய தொழில் நுட்பத்தையும் அறிவுசார்ந்த விடயங்களையும் கற்றுகொண்டனர்.

சீன உயர்வேக தொடர்வண்டி, மேலதிகமான மக்களுக்கு உதவி அளிக்கும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற ஆக்கப்பணி, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் கதைகளை அதிகமாக ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.