சீனாவின் ஜனநாயகம்:உண்மையான மற்றும் சிறந்த ஜனநாயகம்
2021-12-04 19:48:31

சீனாவில் ஆய்வுப் பயணம் மேற்கொண்ட போது, பல கிராமங்களில் கிராமவாசிகள் சிறிய இருக்கையில் அமர்ந்து கிராம வளர்ச்சி பற்றி விவாதம் நடத்துவதுண்டு என கண்டறிந்தேன் என்று பிரிட்டனின் பாத் நகரின் துணை தலைவர் யுக்டேஷவர் குமார் தெரிவித்திருந்தார்.

சிறு இருக்கையிலான ஜனநாயகம் என அழைக்கப்படும் இவ்வடிவம், சீனாவின் ஜனநாயகம் எனும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அடிமட்ட ஜனநாயக வடிவமாகும்.

மக்கள் ஆட்சி மற்றும் மக்களிடம் இறையாண்மை, ஜனநாயகத்தின் அசல் பொருள் ஆகும். ஆனால் நீண்டகாலமாக மேலை நாடுகள் ஜனநாயகத்தை திரித்துப்புரட்டி, தங்கள் தேர்தல் அமைப்புமுறையை ஜனநாயகத்தின் ஒரேயொரு வரையறையாகக் கொண்டு செயல்படுகின்றன. மாறாக, வேறுபட்ட முறைகளில் ஜனநாயகத்தை நனவாக்க முடியும். உகந்த முறைதான் தலைசிறந்த ஒன்று என்பதையும், ஒரு நாட்டின் ஜனநாயகத்துக்கு, மக்களே நாட்டின் உரிமையாளராக இருப்பது திறவுகோலாகும் என்பதையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 100 ஆண்டுகளில் அயரா முயற்சியுடன் மேற்கொண்ட ஆய்வுகள், குறிப்பாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு முழு நடைமுறை மக்கள் ஜனநாயகத்தை முன்னேற்றி வரும் அனுபவங்கள் வெளிப்படுத்தியுள்ளன.