அமெரிக்க ஜனநாயகத்தின் குறைப்பாடு
2021-12-07 20:33:58

சில நாட்களுக்கு முன், அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள பள்ளி ஒன்றில், துப்பாகிச்சூடு சம்பவம் மீண்டும் நிகழ்ந்தது. 15 வயதான மாணவர் ஒருவர், 4 மாணவர்களைச் சுட்டுக் கொன்றார். அவரது துப்பாக்கி, பெற்றோர் வழங்கிய கிறிஸ்துமஸ் அன்பளிப்பாகும்.

மனித உரிமைக்கான பாதுகாப்பு என்பதை, அமெரிக்க ஜனநாயகத்தைப் பரவல் செய்த காரணங்களில் ஒன்றாக அமெரிக்கா கொண்டு வருகிறது. ஆனால், அமெரிக்காவில் பொது மக்களின் அடிப்படை வாழ்வுரிமை  உத்தரவாதத்தைப் பெறுவது கடினம். சீனாவின் சிந்தனை கிடங்கு ஒன்று அண்மையில் வெளியிட்ட அமெரிக்க ஜனநாயகத்துக்கான 10 கேள்விகள் என்னும் அறிக்கையில், கட்டுப்படுத்தப்படாத துப்பாக்கிகள் அமெரிக்காவின் பொது மக்களின் அடிப்படை மனித உரிமைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி கட்டுப்பாடு பிரச்சினை, அமெரிக்க ஜனநாயகத்தின் குறைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது.