பண அரசியலில் ஈடுபடும் அமெரிக்காவில் உண்மையான ஜனநாயகம் உள்ளதா?
2021-12-07 15:49:51

அமெரிக்கா, ஒரு ஜனநாயக நாடு அல்ல. பணக்காரர்களால் ஆளப்படும் நாடு மட்டும் என்று சிங்கப்பூர் அறிஞர் கிஷோர் மஹபுபானி அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அமெரிக்காவில் “ஜனநாயம்” அந்நாட்டின் பணக்காளர்களுக்கு சேவை புரிந்து வருகிறது என்பது உண்மையே. இது ரகசியம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல்களில் 91 விழுக்காட்டு அளவிற்கு மிக அதிக நிதி ஆதரவுடைய வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்காவின் ஜனநாயகம், மூலதனத்தின் அடிப்படையில் பணக்காரர்கள் ஈடுபடும் விளையாட்டு ஆகும். இந்த சூழலில், எண்ணற்ற சாதாரண மக்களின் கோரிக்கைகள் மற்றும் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன.

கடந்த 10 ஆண்டுகால “சமூக வளர்ச்சிக் குறியீட்டில்”அமெரிக்கா உள்ளிட்ட 3 நாடுகள் மட்டுமே சரிவைச் சந்தித்துள்ளன என்று 2020ஆம் ஆண்டு 163 நாடுகள் குறித்து நடத்தப்பட்ட ஓர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

அமெரிக்கா, அந்நாட்டில் பண அரசியலை வேரோடு நீக்க முடியாது. ஆனால்,  இப்போது  அமெரிக்கா ஜனநாயக உச்சி மாநாட்டை நடத்துவது அபத்தமான செயல் என்று பொதுவாகக் கருதப்படுகிறது.