ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் அமெரிக்காவின் ஐனநாயக உச்சி மாநாடு
2021-12-08 18:26:15

ஹாங்காங்கில் குழப்பத்தை ஏற்படுத்திய பிறகு தப்பிச் சென்ற லோ குன்சொங் என்பவர், அண்மையில் கூறுகையில், அமெரிக்காவின் அழைப்பை ஏற்று அதன் ஜனநாயக உச்சிமாநாட்டில் உரை நிகழ்த்த உள்ளதாகத் தெரிவித்தார்.

ஐயத்துக்குரிய குற்றவாளியை அழைத்த அமெரிக்காவை நம்ப முடியாது. அமெரிக்கா ஐனநாயகத்தை சாக்குப்போக்காக கொண்டு, ஹாங்காங் பாதுகாப்பு சட்டத்தை மீறி தப்பிச் சென்ற ஐயத்துக்குரிய குற்றவாளியைப் பேணிக்காத்து, சீன உள் விவகாரத்தில் தலையீடு செய்த இலக்கை இது வெளிகாட்டியுள்ளது. இதன் மூலம், அமெரிக்காவின் போலியான ஜனநாயகம் உலகிற்குத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சொந்த நாட்டைப் பிளவு செய்து ஹாங்காங்கின் ஜனநாயகத்துக்குத் தீங்கு விளைவிக்கும் ஐயத்துக்குரிய குற்றவாளிக்கு, ஹாங்காங் பொது மக்களின் சார்பாக ஐனநாயகத்தை விவாதிக்கும் உரிமை கிடைக்காது.