தைவான் நீரிணையின் அமைதிக்கு அமெரிக்க அரசியல்வாதிகள் அச்சுறுத்தல்
2021-12-09 19:01:20

அமெரிக்கா நடத்தும் கேலி கூத்து போன்றுள்ள ஜனநாயக உச்சிமாநாடு இன்று அரங்கேறியது. இதனிடையே தைவான் சுதந்திர சக்திக்கு ஆதரவளிக்கும் கருத்துக்களை அமெரிக்க அரசியல்வாதிகள் அண்மையில் தெரிவித்து வருகின்றனர்.

தைவானில் ஊடுருவுதல் என்ற கூற்றைப் பரப்பிய பிறகு, அமெரிக்கா மீண்டும் கருப்பை வெள்ளையாகக் கூறி, தைவான் நீரிணையின் அமைதி மற்றும் நிலைத்தன்மையை சீனா சீர்குலைப்பதாக அவத்தூற்றைப் பரப்பி, சீனாவின் ஒருமைப்பாட்டைத் தடுக்க முயன்று வருகிறது. அமெரிக்கர்கள் சிலர் நம்பகத்தன்மை இல்லாமல், தைவான் விவகாரத்தைப் பயன்படுத்தி சீனாவின் வளர்ச்சியைத் தடுக்கும் தீய நோக்கத்தை இது வெளிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இராணுவ மற்றும் தூதாண்மை அச்சுறுத்தல் பயனளிக்காது. தன்னால் அழைக்கப்பட்ட ஜனநாயக உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள தைவானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுப்பது, உலகளவில் மிகப் பெரும்பாலான நாடுகள் பின்பற்றும் ஒரே சீனா என்ற கொள்கைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.