மக்களின் ஆதரவுடன் கால ஓட்டத்திற்கு ஏற்ற கொள்கை
2021-12-10 17:14:30

தைவானுடனான தூதாண்மை உறவைத் துண்டித்ததாக நிகரகுவா அறிவித்ததைத் தொடர்ந்து,  சீனாவும் நிகரகுவாவும் இரு தரப்புத் தூதாண்மை உறவை மீண்டும் தொடங்கி உள்ளதாக 10ஆம் நாள் அறிவித்தன.

ஒரே சீனா என்ற கொள்கை, சர்வதேச சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது கருத்து ஆகும். இது, பொது மக்களின் ஆதரவுடன் கால ஓட்டத்திற்கு ஏற்றதாகவும் , எந்த சக்தியாலும் தடுக்க முடியாததாகவும் உள்ளது.

சீனா, பெரிய நாட்டை மற்றும் சிறிய நாட்டை வேறுபாட்டின்றி ஒரே மாதிரியாக கருதுகிறது. சீனா, பன்னாட்டு மக்கள் தத்தமது வளர்ச்சிப் பாதையைத் தேர்வு செய்யும் உரிமையை மதித்து, பன்னாடுகள் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு ஆதரவு அளிக்கிறது.  தூதாண்மை உறவை மீண்டும் தொடங்கிய பிறகு சீனாவும் நிகரகுவாவும்   ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளித்து ஒன்றுக்கு ஒன்று நன்மை தரும் விதமாக பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களை பயனயடைய செய்யும்.