அமெரிக்க "ஜனநாயக உச்சி மாநாட்டின்" உண்மைகள்
2021-12-11 19:25:36

அமெரிக்காவின் தலைமையில் "ஜனநாயக உச்சி மாநாடு" உள்ளூர் நேரப்படி 10ஆம் நாள் நிறைவடைந்தது.  ஹாங்காங் குழப்பத்தில் ஈடுபட்டு தப்பிச் சென்ற லுவோ குவான்காங், தைவான் அதிகார வட்டாரத்தின் பிரதிநிதி டாங் ஃபெங் ஆகியோர் இம்மாநாட்டில் பங்கேற்றது சர்வதேசச் சமூகத்துக்கு அபத்தமானதாகவும் கேலிக் கூத்தாகவும் இருப்பதாகக் கருதப்படுகின்றது.

தப்பிச் சென்ற குற்றவாளி ஒருவரை உண்மையில் கௌரவ விருந்தினராக வரவழைத்த அமெரிக்கா, ஜனநாயக மதிப்பைக் காலால் மிதித்து மாசுபடுத்தியது.

பிரிவினையைத் தூண்டி மோதலை உருவாக்கும் அமெரிக்காவின் நோக்கத்தை இது முழுமையாக வெளிக்காட்டியுள்ளது.

தற்போது, உலகம் முன்னென்றும் கண்டிராத அறைகூவல்களை எதிர்கொண்டுள்ளது. முன்னெப்போதையும் விட ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது, சர்வதேசச் சமூகத்தின் அவசரத் தேவையாகும். பனிப்போர் மனநிலையை அமெரிக்கா கைவிட்டு விட்டு, சர்வதேசச் சமூகத்துக்கு நன்மை பயக்கும் விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று சீனா விருப்பம் தெரிவித்தது.