நிதானமாக வளர்ந்து வரும் சீனப் பொருளாதாரம்
2021-12-11 20:59:55

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சீனாவின் மத்திய பொருளாதாரப் பணிக் கூட்டம் டிசம்பர் 8ஆம் நாள் முதல் 10ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து நிதானமாக வளர்ந்து வருகிறது என்று இக்கூட்டத்தில் தகவல் வெளியிடப்பட்டது.

அடுத்த ஆண்டு பொருளாதாரத் துறைக்கான 7 முக்கிய கொள்கைகளில் நிதானமான பயன் தரும் ஒட்டுமொத்தக் கொள்கையானது முதலிடத்தில் வகிக்கின்றது. இவ்வாண்டின் முதல் 3 காலாண்டுகளில் சீனாவின் மொத்த உற்பத்தி மதிப்பு கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட 9.8 விழுக்காடு அதிகமாகும். 14ஆவது ஐந்தாண்டு திட்டம் சீராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பதை இது காட்டுகின்றது. சீனச் சந்தையில் முதலீடு செய்த பல வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களும் இதிலிருந்து பயன் பெற்று வருவதில் ஐயமில்லை.

இது மட்டுமல்லாமல், சீனா வெளிநாடுகளுக்குத் திறக்கும் அளவு மேலும் விரிவாகும். அதனுடன் உலகத்துடன் மேலதிக பயன்களைப் பகிர்ந்து கொள்கிறது. ஆசிய நாடுகளில் மிக அதிக வளர்ச்சி உள்ளாற்றல் கொண்ட நாடு சீனா என்று பிரான்ஸின் சொசைட்டி ஜெனரல் வங்கி மதிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.