அமெரிக்க தடை நடவடிக்கைக்கு வங்காளத் தேசம் எதிர்ப்பு
2021-12-12 17:34:51

வங்காளத் தேசத்தின் காவல்துறையைச் சேர்ந்த விரைவுத் தாக்குதல் படைப்பிரிவு மற்றும் தொடர்புடையவர்களின் மீது மனித உரிமை அத்துமீறல் என்ற பெயரில், தடை நடவடிக்கை மேற்கொள்வதாக அமெரிக்கா 10ஆம் நாள் தெரிவித்தது. இது குறித்து வங்காளத் தேசத்தின் வெளியுறவு அமைச்சகம் 11ஆம் நாள் அந்நாட்டுக்கான அமெரிக்கத் தூதரை வரவழைத்து கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு, போதைப் பொருள் கடத்தல் மற்றும் நாடு கடந்த குற்றங்களை ஒடுக்கும் முன்னணியில், விரைவுத் தாக்குதல் படைப்பிரிவு செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவின் தடை நடவடிக்கைகள், இப்படைப்பிரிவுக்குக் களங்கம் ஏற்படுத்தும் செயலாகும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

அதே நாள் செய்தி மற்றும் வானொலி துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமெரிக்கா மற்ற நாடுகளின் மீது விதிக்கும் தடை நடவடிக்கைகள், ஒரு சார்பாகவும் பயன் இல்லாததாகவும் உள்ளன. அமெரிக்காவில் மனித உரிமை நிலைமை மோசமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.