பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெறுவது உறுதி
2021-12-14 10:30:29

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகள் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள அதிகாரிகளை அனுப்பப் போவதில்லை என்று தெரிவித்தன. குறிப்பிட்ட சில நாடுகளுக்கு சீனா அழைப்பை விடுக்கவில்லை என்பதால், அவற்றின் நிலைப்பாடு அரசியல் தலையீடு மட்டுமே. அவற்றின் அதிகாரிகள் வருகை தந்தாலும் தராமல் இருந்தாலும், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சிறந்த முறையில் நடைபெற்று வெற்றி பெறும்.

ஒலிம்பிக் சாசனத்தில் அரசியல் நடுநிலை என்ற கொள்கையும், ஒலிம்பிக் பொன்மொழியில் ஒன்றாக இருப்பதும் தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது குறிப்பிட்ட சில நாடுகள் சித்தாந்தம் சார் பாகுபாட்டுடன் விளையாட்டுத் துறையை அரசியலாக்கும் செயலில் ஈடுபட்டு, ஒலிம்பிக் எழுச்சியை மீறி, சொந்த விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் நலன்களுக்கு தீங்குவிளைவித்துள்ளன. இது சர்வதேச சமூகத்தின் பொது எதிர்ப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, உலக குளிர்கால விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆர்வலர்களின் சிறந்த விருந்தாகும். குறிப்பிட்ட சில நாடுகளின் நிலைப்பாடு, இவ்விளையாட்டுப் போட்டி மீதான சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பைப் பாதிக்காது.