இரண்டு எண்ணிக்கைகள்
2021-12-14 20:51:02

உள்ளுர் நேரப்படி 13ஆம் நாள் வரை, அமெரிக்காவில் 5 கோடிக்கு மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உறுதி செய்யப்பட்டனர். இந்நோய்யால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 இலட்சத்தை எட்டும். இவ்விரண்டு எண்ணிக்கைகள் உலகளவில் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

முழு உலகிலும் மிக வளர்ச்சி அடைந்த இந்த நாடு ஏன் நோய் தடுப்பில் தோல்வி கண்டது? ஜனநாயக அமைப்புமுறையின் முன்மாதிரியாக தன்னே தானை அழைக்கும் அமெரிக்கா ஏன் சொந்த நாட்டு மக்களின் உயிர்களைப் பாதுகாக்கத் தவறியது? உலகளவில் இத்தகைய கேள்விகள் எழுந்துள்ளன.

கொவிட்-19 நோய் பரவலை எதிர்நோக்கும் போது அமெரிக்காவின் ஜனநாயக அமைப்புமுறை செல்லாததாகிவிட்டது. கூட்டாட்சி அரசு, பல்வேறு மாநில அரசுகள் ஆகியவை தனிப்பட்ட முறைகளில் செயல்பட்டு வருகின்றன. இரு கட்சிகளின் போட்டியில், நோய் தடுப்பு அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய துறைகளிலுள்ள முரண்பாடுகளும் அமெரிக்க ஜனநாயகத்தின் குறைபாடும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.