சீன மற்றும் ரஷிய உறுதியான உறவு
2021-12-16 16:58:17

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 15ஆம் நாள் பிற்பகல் ரஷிய அரசுத் தலைவர் புதினுடன் காணொளி வழியில் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். கடந்த நூற்றாண்டில் கண்டிராத மாற்றம், கரோனா தொற்றுநோய் ஆகியவற்றின் பாதிப்புகளை அகற்றி, சீன-ரஷிய உறவு புதிய உயிராற்றலைக் காட்டியுள்ளது.

இரு நாட்டு அரசுத் தலைவர்களின் தலைமையில், பல்வேறு துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்பு சாதனைகளை இடைவிடமால் கிடைத்து வருகின்றன. பொருளாதார மற்றும் வர்த்தகத் துறையில், இவ்வாண்டு சீன மற்றும் ரஷிய வர்த்தகத் தொகை, வரலாற்றில் மிக உயர்ந்த பதிவாகியது. இது இவ்வாண்டின் முதல் 11 திங்கள் காலத்தில், 13 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. இப்பேச்சுவார்த்தையில், நாட்டின் நீண்ட கால அமைதியைப் பேணிக்காக்கும் வகையில், ரஷியா மேற்கொண்டுள்ள முயற்சிகளைச் சீனா முன்பு போலவே உறுதியாக ஆதரிக்கின்றது. தைவான் தொடர்பான பிரச்சினைகளில் சீன அரசின் நியாயமான நிலைப்பாட்டை ரஷியா உறுதியாக ஆதரிக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டது. இரண்டு பெரிய நாடுகள் ஒற்றுமையுடன் மேலை நாடுகளின் தலையீட்டை எதிர்க்க வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் சீன மற்றும் ரஷிய அரசுத் தலைவர்கள் ஒருமனதாக தெரிவித்தனர்.